Monday, July 22, 2013

பாலகன் பாலச்சந்திரன்


எந்தப் போர் விதி சொன்னது பட்டாம் பூச்சியின்
சிறகில் பாஸ்பரஸ் 
வீசலாமென்று!!
வீரன் ஈன்ற மகன் வெண்பளிங்கு மார்பழகன் சுட்டபழமாய்
வெட்டவெளியில் கிடந்தபோது விரைந்தோடும் காலமும்
உறைந்துற்றது ஒரு கனம்!!
விருட்சம் விழுந்தபோதும் அதிராத பூமி இந்த இலை
விழுந்தபோது நடுங்கி அடங்கியது.!!
பாரதி வரிகளுக்கு ஈழத்தில் பொருள் தந்தாயடா இறவாச் சிறுவா
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
எங்கள் விதைகளை அழித்தன தோட்டக்கள் என்றேனும்
ஒரு நாள் விழுந்த தோட்டக்கள் விதைகளாகும்
அன்றும் இன்றும்போல் சகலகண்களையும்
மூடிக்கொண்டுபோ சர்வதேச சமூகமே...!!!

-கவிஞர் வைரமுத்து


No comments: