Monday, July 22, 2013

தமிழா நீ பேசுவது தமிழா!

தமிழா நீ பேசுவது தமிழா!
அன்னையைத் தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய் 
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய் 
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய் 
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய் !
உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை 
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உந்தன்போக்கை 
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை 
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை !
வண்டிக்காரன் கேட்டான் லேப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா ?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ் மொழியை ஆங்கிலம் தின்பதா ?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா ?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா ?
பாட்டி உதட்டில் என்ன லிப்ஸ்டிக்கா ?
வீட்டில் பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா ?

                                   -கவிஞர் காசி ஆனந்தன்


No comments: