Thursday, July 25, 2013

திலீபனே போர் தொடுத்த வீரனே....





1
இருபது ஆண்டுகள் கடந்தோடிப் போனது
இதயமோ இன்னமும் கண்ணீரில் வாடுது
நினைவுகள் நெஞ்சத்தில் நேற்றுப் போல் இருக்குதே
இருபது  வருடங்கள் இன்றென ஆனதே.

தங்கத் தமிழீழம் பெற்றெடுத்த மைந்தனே
பார்த்தீபன் என நாமம் பெற்ற எங்கள் திலீபனே
வங்கக் கடல் தாண்டி வந்து நின்ற பாரதத்தை
வாய் அடைக்க வைத்தே போர் தொடுத்த வீரனே.

பன்னிரு நாட்கள் நீரின்றி உணவின்றி
அணுவணுவாய் உனை வதைத்து 
உண்ணா நோன்பிருந்தாய்.
நேற்றுப்போல் இருக்கிறதே எல்லா நினைவுகளும்.

செந்நீரை சிந்திய தேசத்தில் ஒரு ஜீவன்
உண்ணாமல் நோன்பிருத்தல் கண்டு
கண்மூடித் தூங்கிய காந்தி மகாத்மாவே-உனை
கருணைக் கண் திறந்து பார்த்திருப்பார்

திலீபன் திலீபன் என திசையெங்கும் கதற
தீயாய் உன் தேகம் நீரின்றிக் காய
கண்கள் இருண்டு தொண்டை வரண்டு
கை கால் சோர்ந்து மெய் நோவானதாய்.....

குடல்கள் சுருங்கி உடல் வலிகண்டு
குற்றுயிராகி ஜீவன் சுற்றிச் சுளன்று
கூக்குரல் எழுப்பி தமிழ் ஆர்ப்பரித்தெளுந்தும்
கொண்ட கொள்கையில் குறியென இருந்தவன்.

காந்தி தேசமே பாரத பூமியே
நீதிக்கு வளி காட்டும் இந்திய தேசமே
கருணையே வடிவான காருண்ய தேசமே
உரிமையை பெறத்தானே உண்ணா நோன்பிருந்தான்

பெற்ற வயிறெல்லாம் பற்றி எரிந்தது
அனல் கக்கும் கண்களோடு
கனல் கக்கி தமிழினம்
புனல் அருந்தா ஜீவனோடு புரண்டது.

மலையான ஒரு தேகம் சிலையான போது-அகிம்சை
மதியாது பாரதம்  தடம் மாறியே புது விதியானது.
விடுதலையின் விருட்சமே நீ வெற்றி கண்டாய்
விலையாக இன் உயிரை தமிழுக்கு தந்தாய்.

கண்ணீரில் வாடி நாம் கதி கலங்கி போனாலும்
செந்நீரை ஊற்றி எம் தேசத்தை காப்போம்.
இலட்சிய வேங்கையே கண்மூடித் தூங்குவாய்.-உன்
கனவுகள் நனவாகும் அப்போ கண் விளித்துப் பார்ப்பாய். 















2


23 ஆண்டுகளுக்கு முன்பு
பல்லாயிரக் கணக்கான மக்கள்
பரிதவித்துப் பார்த்திருக்க
ஓர் உயிர் தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து
தன் உடலையும், உயிரையும்
துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கியது
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

தொடர்ந்து 12 நாட்கள்
265
மணித்தியாலங்கள்
ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல்
உண்ணா நோன்பினை மேற்கொண்டு
உடல்துடித்து உயிர்விட்டது
ஒரு உத்தம ஆத்மா
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

ஒரு இலட்சிய நெருப்பான
எங்கள் போராட்டத்தின் குறியீடான
எங்கள் விடுதலைப் போராட்டத்தில்
வித்தியாசமான வியக்கத்தக்க
புதுமையான தியாகத்தைப் புரிந்தவன்
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

1987
ம் ஆண்டு புரட்டாதித்திங்கள் 26ம் நாளன்று
சாத்வீகப் போராட்டக் களத்திலே
தன் உடலும் உயிரும் துடிதுடிக்க
தன்முன்னே மரணத்தை மண்டியிடவைத்தவன்
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

எங்கள் தெய்வீகத் துறவியே
தியாக தீபம் திலீபனே
நாங்கள் நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி
உன் தியாத்தை எண்ணிப்பார்க்கின்றோம்.

திலீபன் நீ யாருக்காக இறந்தாய் ?
தீலீபன் நீ எதற்காக இறந்தாய் ?
எங்கள் மண்ணுக்காக மரித்தவன் நீ
எங்கள் உரிமைக்காக உயிர்துறந்தவன் நீ
எங்கள் சுதந்திரத்திற்காக - உன்
சுவாசத்தை நிறுத்தியவன் நீ
எங்கள் கௌரவத்திற்காக
காலனை அழைத்தவன் நீ.

தான் சித்த மண்ணுக்காக,மக்களுக்காக
ஓர் உயிரினால் ஆகக் கூடச் செய்யமுடிந்த
அதியுயர் தியாகத்தைப் புரிந்தவன்
தன்னைத் தானே விடுதலைக்காய்
கொஞ்சம் கொஞ்சமாய் எரித்துக்கொண்ட
ஒரு இலட்சிய நெருப்பு
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

நாம் உறங்கி விழிப்பதற்காய்
தான் உறங்க மறந்துவிட்டான் - அவன்
தான் உறங்க மறந்ததனால்
அவனை மீழா உறக்கம் அணைத்ததுவே
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

அவன் மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி
அவன் மரணம் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி
அவன் மரணம் தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி
அவன் மரணம் தமிழீழ மக்களை எழுச்சிகொள்ளச் செய்த நிகழ்ச்சி
அவன் மரணம் பாரதநாட்டைத் தலைகுனியவைத்த நிகழ்ச்சி
அவன் மரணம் உலகின் மனச்சாட்சியை ஒருதரம் சீண்டிவிட்ட நிகழ்ச்சி.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றாய் அன்று
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்றாய் அன்று
மக்கள் புரட்சி எரிமலையாய் வெடித்ததையா இன்று
சுதந்திர தமிழீழமும் எம் கண்முன்னே தெரிந்ததையா
ஐயகோ என் செய்வோம்
திராவிடம் தலையெடுத்து தனிநாடு கண்டுவிட
ஆரியம் அசைவின்றி அயர்ந்துதான் இருந்திடுமா ?
பிராந்திய நலனென்றும்கோள அமைப்பென்றும்
பற்பல கதைகூறி,பகைதேசங்கள் ஒன்றாகி
எம் மண்ணை எரித்ததையா
எம் இனத்தை அழித்ததையா.

விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை என்றாயே - எம்
கண்ணெதிரே அன்று உன் உடல்உயிர் துடித்ததுவே
தத்துவங்களைத் தலைகீழாக்கிய தெய்வீகத் துறவியே - நீ
மிதிக்கப்பட்ட தமிழினத்தின் வேதனையில்
வெடித்து வெளிவந்த தீப்பிழம்பு
அவன்தான் தியாகதீபம் திலீபன்.

மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டவனே
அன்று சாவு உன்னிடம் சரணடைந்தது - நீ
காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாத நட்சத்திரம் - உன்
பாதம் பட்டதால் எங்கள் ©மி புனிதம்பெற்றது - நீ
காலத்தால் சாகாத வரலாற்றுப் புரசனாக - நீ
என்றும் உலகெங்கும் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்..!!

3

தியாகம் என்ற உணர்விற்கு உரித்தானவன் 
தீ சொரியும் பேச்சுக்கு உறவானவன் 
அகிம்சை என்ற சொல்லின் திருவுருவத்தை 
அணைத்து விட்டார்கள் எங்கள் தீபத்தை அன்னியர்கள்
ஈழம் என்ற கனவோடு களம் பாய்ந்தான்- தம் சங்கதிகளுக்கு 
இனிய வாழ்வு உறவாக கனவு கண்டான் 
அகிம்சை என்ற சொல்லுக்காய் உயிர்நீத்தார் ஆனால் இன்றும் 
ஆயிரம் ஆயிரம் தம்பிகளை படை சேர்கின்றார் - தம் நினைவால்
விண்ணுலகில் தெய்வங்கள் பல உண்டாம்-ஆனால் 
விழி கொண்டு பார்த்தவர்கள் யாரும் அல்ல
எம்  அருகில் வாழ்ந்தவர் திலீபன் அண்ணா
எமன் வந்த அழைத்தானோ அங்கு உண்மை தெய்வம் வேண்டும் என்று
இருபத்து மூன்றாண்டுகள்  இறந்தனவோ? 
எம் உயிருக்குள் அகிம்சை தீபம் கலந்தனவோ? 
கண்கள் கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தாலும் உமக்கு, 
கர்வம் எம் மனதோரம் பிறக்கத்தான் செய்கிறது...
கடவுளின் அவதாரம் ஒன்று - எம்
கண்களோடு உம்முருவில் இம்மண்ணில் வாழ்ந்ததை எண்ணி.
தாயகம் காக்க படை புகுந்தார்
தலைவன் கனவு நிறைவேற உயிர் துடித்தார்
அந்நிய படையை அகற்ற அகிம்சை கொண்டார்
இன்று இவன் புகளுக்கு இணையாக எவர் உண்டு இவ்வையகத்தில் .....
இவர் பெருமை கூற  
இவ் ஜென்மம் போதுமா எமக்கு
மலை  புகழ்  பட 
மைனாவால் தன் முடியுமா?
  
கண்களின் புரட்சி 
கலங்க மற்ற மனது
கல்லான இதயத்தை கூட
கனியச செய்துவிடும் இவர் பேச்சு
இவர் கண்ட கனவு ஒன்றே 
அது கலங்கமற்ற கனவு அது
ஈழம் என்ற நாட்டை 
உரித்தானவனுக்கே உறவாக வேண்டும் என்பதே ...
இனி கவலை வேண்டாம் உனக்கு
இங்குண்டு பல தம்பிகள் உன் கனவோடு
மண்ணை மீட்டும் வரை 
மண்ணுக்குள் விதை உண்டாலும் 
முள்ளுச செடியாய் முளைத்து 
அன்னியன் காலை துண்டிப்போம் என்று...
அண்ணனே விரைவில் ஈழம் நம் கையில் 
வரும் சங்ததிக்கு இனி இனிய வாழ்வே 
வருத்தம் வேண்டாம் உனக்கு
கண்ணுறங்கு இனியாவது - உன் 
கடைசி ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்
 



No comments: